உள்ளூர் செய்திகள்

 கையெழுத்து இயக்கம் நடைபெற்றபோது எடுத்த படம்.

மதுபான கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம்

Published On 2022-11-28 07:28 GMT   |   Update On 2022-11-28 07:28 GMT
4 டாஸ்மாக் கடைகள் பஸ் நிலையம், செக் போஸ்ட், உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.

பல்லடம்:

பல்லடம் பகுதியில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் பஸ் நிலையம், செக் போஸ்ட், உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் பல்லடம் பகுதியில் 4 டாஸ்மாக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த டாஸ்மாக் கடைகளை அமைக்க கூடாது என்றும், பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை, நால்ரோடு பகுதியில் செயல்படும் பார் உள்ளிட்டவைகளை,வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பல்லடம் பஸ் நிலையம்,கடைவீதி, உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

Tags:    

Similar News