உள்ளூர் செய்திகள்

நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சந்தித்து மனு கொடுத்த காட்சி.

தெக்கலூரில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.பி. யிடம் பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-03-06 05:09 GMT   |   Update On 2023-03-06 05:09 GMT
  • கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார்.
  • திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவிநாசி :

அவிநாசி அடுத்த அம்மாபாளையத்தில், கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார். அவரிடம், கண்டக்டர் அவிநாசி, தெக்கலுாருக்குள் பஸ் செல்லாது என கூறி இறங்க சொன்னார். செல்வி இறங்குவதற்குள் அஜாக்கிரதையாக டிரைவர் பஸ்ஸை நகர்த்தியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த செல்வி பலியானார். பல்வேறு சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பஸ்ஸை இயக்கிய கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் படி கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவிநாசி வந்த நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் கோவையிலிருந்து செல்லும் பஸ்களும், சேலம், ஈரோடு, திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் பயணிகளை இறக்கி, ஏற்றி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.பி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News