உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் திறன் திருவிழா நாளை நடக்கிறது

Published On 2022-07-29 07:33 GMT   |   Update On 2022-07-29 07:33 GMT
  • சுய தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
  • வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒன்றியம் வாரியாக, இளைஞர் திறன் திருவிழா நடக்கிறது. இதில் 10 மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நாளை 30ந்தேதி உடுமலை ஜி.வி.ஜி., கல்லூரி, ஆகஸ்டு 5-ந்தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 6-ந்தேதி பல்லடம் அரசு கல்லூரி, 12-ந்தேதி பொங்கலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 18-ந்தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லூரி, 26-ந்தேதி வெள்ளகோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 27-ந்தேதி தாராபுரம் அரசு உயர்நிலை பள்ளி, 17ந்தேதி அவிநாசி பெண்கள் மேல்நிலை பள்ளி, 24ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முகாம் நடக்க உள்ளது.

முகாமில் காளான் வளர்ப்பு, அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரிப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல், அப்பளம், மசாலா பொருள் தயாரிப்பு, தேனி வளர்ப்பு, அலங்கார நகை தயாரித்தல், மொபைல்போன் பழுது பார்த்தல் போன்ற சுய தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.விவரங்களுக்கு 94440 94396 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News