உள்ளூர் செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா

Published On 2022-07-21 08:50 GMT   |   Update On 2022-07-21 08:50 GMT
  • வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
  • 1-ந் தேதி வளைகாப்பு உற்சவம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களும் உற்சவங்கள் நடைபெறும்.

அருணாசலேஸ்வரர் ்கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் சிவாசாரியர் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்று விழா நடைபெற உள்ளன. அன்று விநாயகர் மற்றும் உற்சவர் பராசக்தி அம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

தொடர்ந்து தினமும் காலை மாலை அம்பாள் மாடவீதி உலா நடைபெறும். நிறைவு நாளான ஆடிப்பூரம் 10 நாள் ஆகஸ்ட் 1-ந் தேதி திங்கட்கிழமை மாலை கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்க தீர்த்தக் கரையில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மாள் எழுந்தருல்வார். வளைகாப்பு உற்சவம் நடைபெறும். தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடக்கிறது.

இரவு 10 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News