உள்ளூர் செய்திகள்

கார் மரத்தில் மோதி ஒருவர் சாவு

Published On 2023-04-05 09:24 GMT   |   Update On 2023-04-05 09:24 GMT
  • உடலை அப்புறப்படுத்தாமல் பட்டு நூல் பொருட்களை ஏற்றியதால் பொதுமக்கள் வாக்குவாதம்
  • போலீசார் விசாரணை

ஆரணி:

ஆரணி அருகே சோமதாங்கல் கூட்ரோடு அருகில் கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயம் நகர் பகுதியைச் சேர்ந்த நூர் என்பவரின் மகன் அக்ரம் அஹமத் கோர பட்டு நூல் விற்பனை செய்து வந்தார்.

அக்ரம் அஹமத் தனது காரில் ஆரணி அருகே உள்ள சேவூர் ஒண்ணுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு நூல் விற்பனை செய்ய சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரிகை கொண்டு வந்தார். இவருடன் முஷரப் என்பவர் காரை ஓட்டி வந்தார்.

ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள நெசவாளருக்கு பட்டு நூல் விற்பனை செய்த விட்டு ஆரணி வேலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துகுள்ளானது.

அக்ரம் அஹமத் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கார் டிரைவர் முஷ்ரப் படுகாயமடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து 108 ஆம்பூலன்ஸ் மூலம் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த வந்த ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது உடலை அப்புறப்படுத்தாமல் போலீசார் மற்றும் ஓண்ணுபுரத்தில் உள்ள பட்டு உற்பத்தியாளர் கொண்டு வந்த பட்டு நூலை மற்றொரு காரில் ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை கண்ட பொதுமக்கள் காரில் ஏற்றிய நபர்களிடமும் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறந்த உடலை அப்புறப்படுத்தாமல் பொருட்களை ஏற்றி செல்வது நியாயம என பொதுமக்கள் சராமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News