உள்ளூர் செய்திகள்

சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2022-08-31 09:39 GMT   |   Update On 2022-08-31 09:39 GMT
  • நீர்மட்டம் 117 அடியாக பராமரிப்பு
  • அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது

திருவண்ணாமலை:

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,360 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 117 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணையில் 7,875 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

59. 04 அடி உயரம் உள்ள குப்ப நத்தம் அணையின் நீர்மட்டம் 57 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அணைக்கே வினாடிக்கு 280 கன அடி தண்ணீர் செய்யாற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையில் 644.30 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது அணைப்பகுதியில் 28.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.37 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 97 கன அடி தண்ணீர் வருகிறது.அணையில் இருந்து 87 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 62.32 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

அணை பகுதியில் 110.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 50.15 அடியை எட்டியுள்ளது.அணைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News