உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்

Published On 2022-10-11 08:32 GMT   |   Update On 2022-10-11 08:32 GMT
  • கலெக்டர் முருகேஷ் உத்தரவு
  • வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது

திருவண்ணாமலை:

ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக 12 தாலுகாக்களுக்கும் துணை கலெக்டர் நிலையில் 12 நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, வெளியேற்றக் குழு மற்றும் நிவாரண மையம், தங்குமிடம் மேலாண்மை குழு ஆகிய 4 குழுக்கள் மற்றும் 4 நகராட்சிகளுக்கும் நகராட்சி ஆணையர்களை நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீர்வரத்து கால்வா ய்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டார்.

ஒருங்கி ணைப்பு குழு கூதிரு வண்ணா மலை மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் சந்தே கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் கலெக்டர் அலுவல கத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான தங்களின் சந்தேகங்கள், மழை வெள்ள காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டணமில்லா தொலை பேசிஎண் - 1077, மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். திருவண்ணாமலை தாலுகாவை தவிர மற்ற தாலுகாக்களில் வசிப்பவர்கள் தொலைபேசி எண். 04175-1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பழைய பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களை தொடர் மழையின் போது பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், தனலட்சுமி, மந்தாகினி, துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News