உள்ளூர் செய்திகள்

போளூர் அருகே உள்ள திருமலை கிராமத்தில் குந்தவை நாச்சியார் சிலையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உள்ளார்.

குந்தவை நாச்சியார் சிலை திறப்பு

Published On 2023-05-01 07:01 GMT   |   Update On 2023-05-01 07:01 GMT
  • அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
  • சமண மதத்தை சேர்ந்தவர்களுக்கு திராவிட அரசு என்றென்றும் பாதுகாப்பாகவும் உறுதுணை யாகவும் இருக்கும்

போளூர்:

போளூர் அருகே உள்ள திருமலை கிராமத்தில் அமைந்துள்ள ஜெயின் மடத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் சகோதரியும் சோழகுலத்தின் இளவரசியமான குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தனர்.

இந்த விழாவில் டாக்டர் ஸ்ரீ தவள கீர்த்தி பட்டாரக சுவாமிஜி தலைமை வகித்தார். தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக பொதுப்ப ணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தார்.

அவர் பேசியதாவது:-

சமண மதத்தை சேர்ந்தவர்கள் உயிர்களிடத்தில் அன்பு, கருணை, காட்டுவதில் சிறந்தவர்கள் எந்த உயிருக்கும் தீங்கு விளைவைக்காதவர்கள் ஜாதி மொழி இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள் கொள்கையை உற்று நோக்கினால் திருவள்ளுவரே சமண மதத்தில் தான் தோன்றியிருப்பாரோ என்ற ஒரு ஐயம் ஏற்படுகிறது.

சமண மதத்தை சேர்ந்த வர்கள் சிறுபான்மை யனராக இருந்தாலும் அவர்களுக்கு திராவிட அரசு என்றென்றும் பாது காப்பாக உறுதுணை யாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் ஆர்.ராஜசேகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News