- கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
- பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்நர்மா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பட்டாச்சாரியார் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமங்கள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பட்டாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்தை காண ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகரை தரிசனம் செய்து சென்றனர்.