கடந்தாண்டு போளூர் பகுதியில் 65,380 பேர் மீது வழக்கு
- போக்குவரத்து விதிகளை மீறியதாக நடவடிக்கை
- விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போளூர் டி.எஸ்.பி. குமார் மேற்பார்வையில் போளூர், கலசப்பாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, ஜமுனாமுத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ், ராமச்சந்திரன், லட்சுமிபதி, பிரபாவதி, சப்- இன்ஸ்பெக்டர்கள். சிவக்குமார், சீனிவாசன் மகாலிங்கம் ராஜ் ஜெய்குமார் சரவணன், மற்றும் போலீசார் ஆண்டு முழுவதும் வாகன தணிக்கை செய்தனர்.
கடந்த 12 மாதங்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஒட்டிய 34 ஆயிரத்து 503 பேர் மீதும் கார் ஓட்டும் போது சீட்டு பெல்டு அணியாமல் இருந்ததாக 7ஆயிரத்து 677மீதும் செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டிய 7 ஆயிரத்து 581, பேர் மீதும் இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்த வழக்கில் 4 ஆயிரத்து 910 பேர் மீதும் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியதாக 4 ஆயிரத்து 840 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அதிகம்பாரம் ஏற்றி செல்லுதல், உரிமை இன்றி வாகனம் ஓட்டியது, போன்ற பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 65 ஆயிரத்து 350 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த தகவலை டி.எஸ்.பி. குமார் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்:-
கடந்த ஆண்டு 39 திருட்டு வழக்குகளில் 31 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர், 177 பேர் காயம் அடைந்தனர் என்றார்.