உள்ளூர் செய்திகள்

படவேடு கமண்டல நதி பாலம் அருகே சாலை மறியல் செய்த பொதுமக்கள்.

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்

Published On 2022-11-28 09:35 GMT   |   Update On 2022-11-28 09:35 GMT
  • நாற்று நட்டும் போராட்டம்
  • வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைவதாக புகார்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியில் பெருமாள்பேட்டை, துரிஞ்சாபுரம் கிராமங்கள் செண்பகத்தோப்பு அணை செல்லும் வழியில் வனத்துறை சாலையில் உள்ளது.

இந்த சாலை வனத்து றையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால் குண்டும் குழியுமாக தண்ணீர் ஆங்காங்கே தேங்கி போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.

இங்கு வரும் அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கமண்டல நதி பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் படவேடு பகுதியில் வரும் அனைத்து வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், சந்தவாசல் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் காரணமாக படவேடு பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக சேறும் சகதியுமாக உள்ள செண்பகத்தோப்பு அணை செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News