உள்ளூர் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் பூத வாகனத்தில் சாமி வீதி உலா
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- நாளை பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பக உற்சவம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2-ம் நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர், விநாயகர் மாடவீதியில் உலா வந்தார். தொடர்ந்து நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானங்களில் வீதி உலா வந்தனர்.
இன்று 3-ம் நாள் காலை விநாயகர், சந்திரசேகர் பூத வாகனத்தில் மாட வீதி உலா வந்தனர். இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற உள்ளன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து நாளை 4-ம் நாள் விநாயகர் சந்திரசேகர் நாகா வாகனத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பக உற்சவம் வெள்ளி காமதேனு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளன.