உள்ளூர் செய்திகள்

செய்யாறு அடுத்த வட பூண்டி பட்டு கிராமத்தில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நட்ட காட்சி.

செய்யாறில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-09-04 07:59 GMT   |   Update On 2022-09-04 07:59 GMT
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது

செய்யாறு:

செய்யாறு தொகுதியில் செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு, அனக்காவூர் ஒன்றியம் வீரம்பாக்கம், வெம்பாக்கம் ஒன்றியம் சோதியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்படி நேற்று செய்யாறு ஒன்றியம் வடபூண்டிபட்டு கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2000 மரக்கன்றுகள்

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சுந்தரேசன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 2000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர்கள் அசோக், சான் பாஷா, திமுக நிர்வாகி பார்த்திபன், வேளாண் உதவி அலுவலர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News