மிருகண்ட அணை நிரம்பியதால் தண்ணீர் திறப்பு
- ஜவ்வாதுமலை பகுதியில் கனமழையின் காரணமாக நீர்வரத்து
- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை:
ஜவ்வாதுமலை பகுதியில் கணமையின் காரணமாக கலசப்பாக்கம் மிருகண்ட அணை முழு கொள்ளளவு எட்டியதால் அணையிலிருந்து சுமார் 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலசப்பாக்கம் தொகுதி ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிரா மத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் முழு கொள்ளளவு 23 அடியாாகும். தற்போது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகின்றன.
இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப்பகுதி மற்றும் கலசப்பாக்கம் பகுதிகளில் நேற்று 96.6 மில்லி மீட்டர் கனமழை பெய்தது இதனால் ஜவ்வாது மலை பகுதியிலிருந்து மிருகண்டா நதி அணைக்கு சுமார் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு உள்ளன. இதனால் அணையின் 20 அடி கொள்ளளவுக்கு மேல் நிரம்பி வருகின்றன.
தற்போது அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் அணையின் அருகே உள்ள சீனாந்தல், காந்த பாளையம், ஆதமங்கலம் புதூர், கெங்க லமகாதேவி கேட்டவரம்பாளையம், அருணகிரிமங்கலம், சிருவள்ளூர், எலத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.