நல்லூர் கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் உற்பத்தி தொழில்நுட்பப்பயிற்சி
- விவசாயிகளுக்கு ‘மண்புழு உரம் தயாரித்தல் ’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டரங்கில் நடைப்பெற்றது.
- மாசற்ற சுற்றுபுறசூழலுக்கு உகந்த பண்ணை கழிவுகளை மறுசு ழற்சி செய்யும் தொழில் நுட்ப முறைகளை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.
பரமத்திவேலூர்:
பரமத்தி வட்டாரம், நல்லூர் கிராம முற்போக்கு விவசாயிகளுக்கு 'மண்புழு உரம் தயாரித்தல் '' குறித்து தொழில்நுட்ப பயிற்சி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டரங்கில் நடைப்பெற்றது. பயிற்சிக்கு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில் மண்புழு உரம் என்பது மண்புழு உற்பத்தி செய்யும் அங்கக உரத்தைக் குறிக்கிறது. மண்புழு உரம் நச்சு அல்லாத திட மற்றும் திரவ அங்கக கழிவுகளை மக்கச் செய்வதற்கான ஒரு சிறந்த பயனுள்ள செலவு குறைந்த மற்றும் மாசற்ற சுற்றுபுறசூழலுக்கு உகந்த பண்ணை கழிவுகளை மறுசு ழற்சி செய்யும் தொழில் நுட்ப முறைகளை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.
பயிற்சியில் பாலப்பட்டி, மோகனூர், பார்வதி இயற்கை பண்ணை, மு ற்போக்கு விவசாயி, அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற்ற வேலுச்சாமி, மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை, மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டியில் அளவு, மண்புழு உரத்தின் பயன்களான மண் அமைப்பு மேம்படும், நீர்ப்பிடிப்பு திறன் கூடுகிறது, மண்அரிமானம் காக்கிறது, பயிர்கள் எளிதில் சத்துக்களை கிரகிக்க உதவுகிறது,
மண்புழு கழுநீர் மிக சிறந்த நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது இதனை இலைவழியாக வழங்கும் போது குறைந்த செலவில் அதிக மகசூல் போன்ற காரணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்து பயிற்சி அளிக்கப்பட்டது.துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.