கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது இதனால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்தது. இதை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் தினமும் வந்து செல்கிறார்கள். தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.
தொடர்ந்து அவர்கள் அணை பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சாப்பிட்டு செல்வார்கள். இதற்காகவே தினமும் ஏராளமானமக்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கோபி செட்டிபாளையம், நம்பியூர், கொடிவேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதே போல் நேற்று இரவும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், மழை ெபய்து வருவதாலும் கொடுவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணை நிரம்பி தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதையடுத்து அணையில் 1700 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
கொடிவேரி தடுப்பணையில் அதினளவு தண்ணீர் செல்வதால் அணையில் குளிப்பதற்கும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் தடை விதித்து பொதுப்பணித்துறை அதி காரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்க ப்பட்டு இருந்தது. இதை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.