உள்ளூர் செய்திகள்

பழைய பாக்கு மட்டை தட்டில் சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சை பழம் வைத்து விற்பனை செய்வதை படத்தில் காணலாம்.

காலபைரவர் கோவிலில் பரிகார பூஜைக்கு பயன்படுத்திய தட்டுகளை மீண்டும் விற்பனை செய்யும் வியாபாரிகள்

Published On 2023-09-08 09:28 GMT   |   Update On 2023-09-08 09:28 GMT
  • சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சம்பழம் வைத்து 100 ரூபாய்க்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
  • வாழை இலை வைத்து மறைத்து அதன் மீது சாம்பல் பூசணி தேங்காய் உள்ளிட்டவை வைத்து மீண்டும் விற்பனை செய்கின்றனர்.

 தருமபுரி,  

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தினங்களில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலமான பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்தும் ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

நேற்று தேய்பிறை அஷ்டமி என்பதால் ஏரா ளமான பக்தர்கள் கால பைரவர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிலர் தங்கள் வேண்டுதலை சாம்பல் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதற்காக கோவிலுக்கு முன்புறமாக பாக்கு மட்டை யில் சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சம்பழம் வைத்து 100 ரூபாய்க்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனை பக்தர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

பக்தர்கள் பயன்படுத்திய பாக்குமட்டை தட்டை சில கடை உரிமையாளர்கள் மீண்டும் எடுத்து வந்து தட்டு தீ பட்ட இடங்கள் மற்றும் சாணம் வைத்த இடத்தில் வாழை இலை வைத்து மறைத்து அதன் மீது சாம்பல் பூசணி தேங்காய் உள்ளிட்டவை வைத்து மீண்டும் விற்பனை செய்கின்றனர். ஏற்கனவே ஒருவர் வைத்து வழிபட்ட தட்டை இவர்கள் எடுத்து வந்து மீண்டும் விற்பனை செய் வது பக்தர்களிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடை உரிமை யாளா்கள் மஞ்சளுக்கு பதிலாக ஜிலேபி பவுடரை பயன்படுத்தி பக்தர்களுக்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வந்ததை மாலைமலர் நாளி ழதலில் வெளியா னதையடுத்து தற்பொழுது மஞ்சள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News