உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறை- மதுரை இடையே ரெயில் இயக்க வேண்டும்

Published On 2023-05-07 09:52 GMT   |   Update On 2023-05-07 09:52 GMT
  • தில்லைவிளாகம், பட்டுக்கோட்டை, மானாமதுரை வழியாக ஒரு நேரடி ரெயில் இயக்க வேண்டும்.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், தில்லைவிளாகம் ராமர், நடராஜர் கோவிலுக்கும் உள்ள ஆன்மிக தொடர்பு.

திருத்துறைப்பூண்டி:

மத்திய ரயில்வே அமைச்சருக்கு, தில்லைவிளாகம் ரயில் பயணிகள் நல சங்க தலைவர் நாச்சிகுளம் தாஹிர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-

மயிலாடுதுறை - மதுரை இடையே திருவாரூர், தில்லை விளாகம், பட்டுக்கோட்டை, மானாமதுரை வழியாக ஒரு நேரடி ரயில் இயக்க வேண்டும்.

முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகள் நம் மாநிலத்தின் பொக்கிஷம். நம் குழந்தைகள் இந்தப் பகுதிகளை எல்லாம் இது வரை பார்த்ததே இல்லை. காரணம், மதுரையிலிருந்து நேரடி ரயில் வசதி இல்லை என்பதே.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் திருவாரூருக்கும் இடையே தில்லைவிளாகம் ராமர், நடராஜர் கோயிலுக்கும் உள்ள ஆன்மிக தொடர்பு, பக்தர்களுக்கு இந்த ரயில் மூலம் இன்னும் வலுப்படும்.

டெல்டா, சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரும் இந்த பகுதி மக்கள், நீதிமன்ற அலுவலர்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

இதேப்போல் பல்வேறு கல்வி நிலைய மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே இக்கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறையில் இருந்து தில்லைவிளாகம் , முத்துப்பேட்டை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News