உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் - பழனி இடையே புதிய மின் மயப்பாதையில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் - பழனி இடையே புதிய மின்மயப் பாதையில் இன்று ரெயில் சோதனை ஓட்டம்

Published On 2022-09-13 07:40 GMT   |   Update On 2022-09-13 07:40 GMT
  • மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
  • இந்த ஆய்வுக்குப் பிறகு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் - பழனி ெரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 100 சதவீதம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய 58 கி.மீ மின்மய ெரயில் பாதையில் அதிகாரிகள் பல்வேறு சோதனைகள் நடத்தி பயணிகள் பயன்பாட்டுக்கு இயக்கலாம் என அனுமதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று முதன்மை தலைமை மின்சார பொறியாளர் சித்தார்த் இறுதி கட்டபணி களை ஆய்வு மேற்கொ ண்டார். அவருடன் மதுரை கூடுதல் கோட்ட ெரயில்வே மேலாளர் ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று காலை 9 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி பழனி வரை சோதனை ெரயில் இயக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு இந்த ெரயில் பாதையில் ெரயில்களை இயக்குவதற்காக 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்ச ப்பட்டு பின்பு சோதனை ெரயிலில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டது. மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

இந்த 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் பாதையை நெருங்குவதோ, தொடுவதோ மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆய்வுக்குப் பிறகு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News