தஞ்சையில், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க கூட்டம்
- மருத்துவ காப்பீட்டு திட்டம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.
- போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுகின்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வேண்டும், நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சாவூரில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அதேபோல அனைத்து கட்சிகள் நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியில் திரளாக பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் சங்க நிர்வாகிகள் சக்திவேல், சுந்தரபாண்டியன், மாணிக்கம், ஓய்வு பெற்ற பொறியாளர் முருகையன், கண்காணிப்பாளர் வீராசாமி, பரிசோதகர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கராசு, மனோகரன், கலியமூர்த்தி, இருதயராஜ், சித்ராசிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.