உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்ட காட்சி.

உடன்குடி அரசு பள்ளியில் மரம் நடும் விழா

Published On 2022-12-08 09:48 GMT   |   Update On 2022-12-08 09:48 GMT
  • தேசிய பசுமை உலக மண்வள நாளை முன்னிட்டு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மரம் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
  • விழாவில் மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உடன்குடி:

தேசிய பசுமை உலக மண்வள நாளை முன்னிட்டு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மரம் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமை தாங்கினார்.

சமூக சேவகரும் தனியார் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளருமான கலில் ரகுமான் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மண் வளம் பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி கூறியும் மரக்கன்றுகளை வழங்கி அதனை நடவும் செய்தார்கள். மேலும் உலக மண் வள நாளை முன்னிட்டு திருமுருகன் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் சுதா மோகன் அரசு பள்ளி மாணவர்களோடு கொண்டாட எண்ணி 100 மரக்கன்றுகளை உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும் நலிவடைந்த மாணவர்களுக்கு எழுது பொருட்களை சமூக சேவகர் ராஜா வழங்கினார். மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, மாதுளம், வெற்றிலை, பிச்சி உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கினர். விழாவில் ஆனந்தா, பாலகணேசன், ஜெய்நாத், தனியார்அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் செல்வி, யமுனா, பராசக்தி, வெர்ஜின், பிருந்தா, முத்து செல்வி மற்றும் பள்ளியின் தேசிய பசுமை படை மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News