உள்ளூர் செய்திகள்

ரூ.12 லட்சம் மதிப்பில் உணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா

Published On 2022-11-25 09:58 GMT   |   Update On 2022-11-25 09:58 GMT
  • ரூ.12 லட்சம் மதிப்பில் உணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறக்கப்பட்டது
  • திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

திருச்சி:

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

ேமலும், 32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிகளில் திருநாவுக்கரசர் எம்.பி. கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,

எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது, மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன். ஆகியோர் திறந்துவைத்த காட்சி. அருகில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News