ரூ9.24 கோடியில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
திருச்சி,
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் நந்தியாற்றின் குறுக்கே 9.24 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் நித்தியானந்தன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி, காணக் கிளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கராயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.