உள்ளூர் செய்திகள்

துறையூர் அருகே அரசு கால்நடை மருத்துவரின் அலட்சியத்தால் பசு மாடுகளை பறிகொடுத்த விவசாயி கதறல்

Published On 2023-02-27 09:25 GMT   |   Update On 2023-02-27 09:25 GMT
  • துறையூர் அருகே அரசு கால்நடை மருத்துவரின் அலட்சியத்தால் விவசாயி பசு மாடுகளை பறிகொடுத்தார்
  • மர்ம நோய் தாக்குதலுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறை–யூர் அருகே உள்ள வாலீஸ்புரம் கிராமத்தை சேர்ந்த–வர் வீரமணி (வயது 35). இவர் அப்பகுதியில ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகி–றார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசு மாட்டிற்கு மர்ம நோய் தாக்கி–யதில் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாட்டினை, கால்நடை மருத்துவமனைக்கு அழைத் துச் செல்ல முடியாத–தால், விவசாயி வீரமணி தனது கிராமத்திற்கு உட்பட்ட குன்னுப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு சென்று விவரத்தை கூறியுள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் அரசு கால்நடை மருத்துவர், தனக்கு வேலை உள்ளதால், என்னால் நேரில் வந்து மாட்டிற்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறியுள் ளார்.

பின்னர் அவர் முசிறி உட்கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனரிடம் வீரமணி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா–ததால், விவசாயி வீரம–ணியின் பசுமாடு பரிதா–ப–மாக உயிரிழந்தது. இதே–போன்று கடந்த ஆறுமாத காலத்தில், விவசாயி வீர–மணியின் ஐந்து மாடு–கள் மர்ம நோய் தாக்கி உயி–ரிழந்துள்ளது என்பது குறிப்பி–டத்தக்கது.

துறையூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மர்ம நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பல பசுமாடுகள் இறந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரி–விக்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ அல்லது கால்நடை பராம–ரிப்பு துறை மண்டல இணை இயக்குனரோ அல்லது கால்நடை பரா–மரிப்பு துறையில் பிரத்யேமாக செயல்பட்டு வரும் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க–வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் ஒவ் வொரு வருவாய் மாவட்டத் திற்கும் கால்நடைகளுக்கான பிரத்யோக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு, இலவச அழைப்பு எண்ணாக 1962 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் பொது–மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தா–ததால், இதுபோன்ற ஏரா–ளமான கால்நடைகள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துள்ள–தாகவும் விவசாயிகள் தெரி–வித்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் இது போன்ற கால்நடை இறப்புகள் ஏற்படாத வண் ணம், ஒவ்வொரு வட்டார அளவில் சுழற்சி முறையில் கால்நடை மருத்துவர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் விதத் தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது–மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Tags:    

Similar News