உள்ளூர் செய்திகள்

திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விலங்கு மேம்பாடு சோதனை குறித்த கருத்தரங்கு நிறைவு

Published On 2023-01-07 08:54 GMT   |   Update On 2023-01-07 08:54 GMT
  • திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விலங்கு மேம்பாடு சோதனை குறித்த கருத்தரங்கு நிறைவுபெற்றது
  • இதில் திருச்சியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், 25 பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினர்.

திருச்சி:

பெங்களூர் இந்திய அறிவியல் அகாடமியின் நிதி உதவி உடன் விலங்கு வளர்ச்சி மற்றும் நோயை புரிந்து கொள்வதற்கான சோதனை மாதிரிகள் குறித்த அறிவியல் அகாடமியின் கருத்தரங்கம் திருச்சி தேசிய கல்லூரியில் 2 நாட்கள் நடைபெற்றது.புதுடெல்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அலகாபாத் நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸஸ் மற்றும் திருச்சி தேசிய கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை மேற்கண்ட கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

நிறைவு நிகழ்ச்சியில் பெங்களூரு இந்திய அறிவியல் அகாடமியின் ஒருங்கிணைப்பாளரும் சென்னை ஐ.ஐ.டி. பயோ டெக்னாலஜி துறை பேராசிரியருமான டாக்டர் கே. சுப்பிரமணியம் எலிக்கன்ஸை மாதிரி உயிரினமாக பயன்படுத்தி ஸ்டெம் செல் உயிரியலுடன் கூடிய ஆராய்ச்சி நுண்ணறிவுகள் குறித்து பேசினார்.பெங்களூர் ஜே.என்.சி.ஏ. எஸ்.ஆரின் நரம்பியல் பிரிவு இணை பேராசிரியர் டாக்டர் ரவி மஞ்சுதயா மனிதர்களில் தன் இயக்கியவியல் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கே. குமார் தலைமை தாங்கினார். திருச்சி தேசிய கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை உதவி பேராசிரியர் டி. கந்தசாமி வரவேற்றார் .

இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினரும் டாடா மரபியல் மற்றும் சமூகத்தின் இயக்குனராகவும் இருக்கும் ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா நிறைவுறை ஆற்றினார். இதில் திருச்சியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், 25 பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினர். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் திருச்சி தேசிய கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் உதவி பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான டி. காயத்ரி நன்றி கூறினார்.






Tags:    

Similar News