திருச்சியில் தயார் நிலையில் கொரோனா சிறப்பு வார்டுகள்
- மத்திய மண்டலத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன
- கடந்த 2 தினங்களாக பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இரட்டை இலக்க எண்ணாக மாறியுள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
திருச்சி:
திருச்சி மத்திய மண்டலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு திருச்சி மாவட்டத்தில் 4 இலக்க எண்ணை தொட்டது. அப்போது பொது மக்களும் ெவளியில் வர அச்சப்பட்டு தொடர்ந்து வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
பின்னர் மாவட்ட நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு முற்றிலும் தடுத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனால் மக்கள் மீண்டும் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது பொது மக்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் இயல்பாக கொரோனா அச்சமின்றி சுற்றிதிரிகிறார்கள்.
கடந்த மாதம் வரையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்க எண்ணில் இருந்தது. ஆனால் கடந்த 2 தினங்களாக பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இரட்டை இலக்க எண்ணாக மாறியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்ைற தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து திருச்சி சுகாதராத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தைப் பொருத்தமட்டில் தற்போது கொரோனா பரிசோதனை நூண்ணுயிரியல் துறை சார்பாக கொரோனா பரிசோதனை செய்வதை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பரிசோதனையின் போது 0.1 சதவீதம் அளவிற்கு தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2 அல்லது 3 தினங்களாக கொரோனா தொற்று உறுதி ெசய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்டவர்களாக வருகிறது. பொது மக்களின் உடலில் தற்போது கொரோனா தொற்றின் வீரியம் குறைந்த அளவில் இருப்பதால் ஒரு வாரத்திற்கு சரியாகி தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
வீரியம் அதிகமாக மாறுவதற்கு முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டும்.
திருச்சி மத்திய மண்டல பகுதிகளான தஞ்சாவூர், புதுக்கோட்ைட, பெர ம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
அனைத்து மாவட்ட ங்களிலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனை செய்வது உள்ளிட்ட செயல்களில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 1,600 படுக்கைகள், 21 கிலோ ஆக்ஸிஜன் உள்ளிட்டவகைள் தயார் நிலையில் உள்ளது.
மேலும் தடையில்லா ஆக்சிஜன் வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருக்கிறது. பொது மக்களும் கவனமாக பொது இடங்களுக்கு செல்லும் போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.