உள்ளூர் செய்திகள்

கல்வி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

Published On 2023-05-17 07:26 GMT   |   Update On 2023-05-17 07:26 GMT
  • தமிழ்நாடு வட்டார கல்வி அலவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
  • பணி வரன் செய்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானம்

திருச்சி, 

தமிழ்நாடு வட்டார கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கமலநாதன் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி (தொடக்க கல்வி) அலுவலகத்தில் புதிதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் மாற்றுப் பணியில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி திட்ட அலுவலர் பணியிடத்தை தொடக்க கல்வி சார்ந்த பணி விதிகளில் சேர்த்து வட்டார கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும்.வட்டார கல்வி அலுவலக அலுவலராக 2019-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் வட்டார கல்வி அலுவலராக பணி வரன்முறை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News