உள்ளூர் செய்திகள்

திருச்சி மாநகராட்சியில் வரி வசூல் அதிகரிப்பு

Published On 2023-05-03 08:37 GMT   |   Update On 2023-05-03 08:37 GMT
  • ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டதால் வசூலில் விறுவிறுப்பு
  • ரூ.18 கோடி வசூலாகி உள்ளது

திருச்சி,

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் இந்த முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனும் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.அதில், திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000 வரை ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இந்த ஊக்கத்தொகை அறிவிப்பினால் திருச்சி மாநகராட்சி வரி வசூல் அதிகரித்துள்ளது.குறிப்பாக முதல் அரையாண்டு வரி சுழற்சிக்கான மொத்த நிலுவைத் தொகையில் 32 சதவீதத்தை திருச்சி மாநகராட்சி வசூலிக்க உதவியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரூ.55 கோடி மொத்த வரி பாக்கியில் ரூ.18 கோடியை மாநகராட்சி வசூலித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஊக்கத்தொகை அறிவிப்பால் மக்கள் ஆர்வத்துடன் வந்து வரி செலுத்தியுள்ளனர்.ஊக்கத்தொகை வழங்குவதால் மாநகராட்சிக்கு இழப்பு ஏதுமில்லை. டெபாசிட்டுக்கு நாங்கள் பெறும் வட்டி, வழங்கிய ஊக்கத்தொகையை ஈடுசெய்யும் எனக் கூறினர். மக்கள் ஒரு மண்டலத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.60 லட்சம் வரை செலுத்துகிறார்கள். முதல் அரையாண்டு வரிச் சுழற்சியில் மட்டுமே ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு காலாவதியாகிவிட்ட நிலையில், குடியிருப்பாளர்கள் வரி செலுத்தினால் அது இன்னும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News