உள்ளூர் செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிதின கொண்டாட்டம்

Published On 2022-12-16 09:54 GMT   |   Update On 2022-12-16 09:54 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிதின கொண்டாட்டம் நடைபெற்றது
  • மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் ராணுவத்தினர் மரியாதை

திருச்சி:

கடந்த 1971-ம் ஆண்டு 13 நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16-ந்தேதி விஜய் திவாஸ் தினம் எனப்படும் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தப் போருக்குப் பின்னர் தான் கிழக்கு பாகிஸ்தான் பகுதி வங்கதேசம் என்ற புதிய நாடாக உதயமானது. வங்காளதேசம் இந்நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடிவரும் அதே வேளையில் இந்தியா-பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜய் திவாஸ் தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் கார்கில் போரில் எதிரிகளை வீழ்த்தி வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கர்னல்.தீபக்குமார் தலைமையில், மேஜர் சரவணன் சகோதரி டாக்டர். சித்ரா, தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் (2) லெப்டினன்ட் கர்னல் அருண்குமார் ஆகியோர் மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் என்சிசி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News