உள்ளூர் செய்திகள் (District)

கைசிக ஏகாதசி சிறப்பு இசை விழா

Published On 2022-12-04 09:09 GMT   |   Update On 2022-12-04 09:09 GMT
  • கைசிக ஏகாதசி சிறப்பு இசை விழா நடைபெற உள்ளது
  • ஸ்ரீரங்கத்தில் இன்று மாலை நடக்கிறது

திருச்சி:

திருச்சி துறையூர் ஸ்ரீ ரங்கா நுண்கலை மையம் சார்பில் கைசிகம் சங்கீத ஆராதனை மற்றும் கை சிக ஏகாதசி சிறப்பு இசை விழா இன்று( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி முளு பாகல் மடத்தில் நடைபெறுகிறது. இதில் சேவா பாரதி தென் தமிழ்நாடு மாவட்டச் செயலாளரும் ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான கே. முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

விழாவில் வாய்ப்பாட்டு வித்வான் டாக்டர் ஆர். காஷ்யப் மகேஷ், வயலின் வித்வான் ஸ்ரீரங்கம் ஜெ. ஆனந்த், மிருதங்க வித்வான் சேலம் கே. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு இசை விருந்து அளிக்கிறார்கள்.

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. சீனிவாசன் கூறும் போது, இருமுடி கட்டி விரதம் இருந்து பிரம்மச்சாரி ஐயப்பனை காண செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் ரங்கநாதரை வழிபட வருகின்றார்கள். இவ்வாறு வருகை தரும் பக்த கோடிகள் ரங்கநாதன் அருளுடன் இனிமையான இசையையும் கேட்டு மகிழ்கிறார்கள். இன்று நடைபெறும் ஏகாதசி சிறப்பு இசை விழாவிலும் திரளான ஐயப்ப பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News