பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற நவீன எந்திரம்
- திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற நவீன எந்திரம் வாங்கப்பட்டு உள்ளது
- மேயர் அன்பழகன் முன்னிலையில் கோர்ட்டு அருகில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகள் அகற்றப்பட்டது
திருச்சி,
திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகள். சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள மழைநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் குப்பை கழிவுகள் மாநகராட்சி ஊழி யர்களால் அகற்றப்பட்டு வருகிறது.
மேலும், பாதாள சாக் கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றுவதற்காக நவீன நீர் உறிஞ்சும் எந்திரம் திருச்சி மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவு களை மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாக சேகரித் துக்கொண்டு மீண்டும் தண்ணீரை மட்டும் பாதாள சாக்கடையில் விட்டுவிடும்.
இவ்வாறு செய்வதன் மூலம் பாதாள சாக்க டைகளில் அடைப்புகள் இல்லாமல் மழைக்காலங் களில் தண்ணீர் செல்வதுடன் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படாமல் இருப்ப துடன் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பார்கள்.
நவீன நீர் உறிஞ்சும் எந்திரம் மூலம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் கோர்ட்டு அருகில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை அகற்றினர்.
அவருடன் நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.