சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது
- சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 12-ந்தேதி தொடங்க இருக்கிறது
- இந்த 28 நாட்களும் இக்கோ–விலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடை–யாது.
மண்ணச்சநல்லூர்:
சக்தி ஸ்தலங்களில் மிக–வும் பிரசித்தி பெற்றது திருச்சியை அடுத்த சமய–புரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தமிழ–கம் மட்டுமின்றி பிறமாநி–லங்க–ளில் இருந்தும் ஏரா–ளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து– விட்டு செல்வார்கள்.சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பூச்சொ–ரிதல் விழா மிகவும் பிர–சித்தி பெற்றதாகும்.
வரு–டந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்புஆகும்.இந்த 28 நாட்களும் இக்கோ–விலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடை–யாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பான–கம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக வழங்கப் படும்.
இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொ–ரிதல் விழா வருகிற மார்ச் 12-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று தொடங் குகிறது. அன்று, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண் யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்கு–ரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலு டன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலை–மையில் கோவில் பணியா–ளர்கள் மற்றும் ஊழி–யர்கள் செய்து வருகின்றனர்.