உள்ளூர் செய்திகள்

முசிறி மக்கள் நீதிமன்றத்தில் 173 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-05-15 08:11 GMT   |   Update On 2023-05-15 08:11 GMT
  • வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்
  • நீதிபதி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது

முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறி சார்பு நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட சட்ட பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் பாக்கியராஜ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் சங்க தலைவர் மருதையா, அரசு வழக்கறிஞர் சப்தரிஷி, வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணி குழுவின் 84 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, வங்கி வழக்கு நிலுவை தொகை ரூ.72 லட்சத்து 65 ஆயிரம், சார்பு நீதிமன்ற வழக்குகளான மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 6 தீர்வு காணப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.22 லட்சத்து 70 ஆயிரம், சிவில் கோர்ட் வழக்குகள் 3 க்கு இழப்பீடு தொகை ரூ.26 ஆயிரத்து 830, குற்றவியல் வழக்குகள் 79 தீர்வு காணப்பட்டு வழக்கு அபராத தொகை ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 500ம் என மொத்தம் 173 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 96 லட்சத்து 99 ஆயிரத்து 330் ரூபாய் பணிக்குழு மக்கள் நீதிமன்ற முகாமில் முடித்து வைக்கப்பட்டது. இம்முகாமில் வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டச் சட்டப் பணிக்குழு தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News