உள்ளூர் செய்திகள் (District)

பசு மாடுகளுக்கான மலடு நீக்க சிகிச்சை சிறப்பு முகாம்

Published On 2022-09-20 09:38 GMT   |   Update On 2022-09-20 09:38 GMT
  • பசு மாடுகளுக்கான மலடு நீக்க சிகிச்சை சிறப்பு முகாம் நடந்தது
  • மணிகண்டம் ஒன்றியம் செங்குறிச்சியில் நடந்தது

திருச்சி

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்டம் பொன்னணியாறு உபவடிநிலப்பகுதி திட்டத்தின்கீழ், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேக்குடி பஞ்சாயத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் மாடுகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமில் பசுக்களுக்கு இலவச செயற்கை முறை கருவூட்டல், சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை, தீவனப்புல் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 50 தாதுப்பு கட்டிகள் வழங்கப்பட்டு அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்தர் ஷீலா வழிகாட்டுதல்படி, ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் கணபதி பிரசாத் முகாமிற்கு தலைமை தாங்கி நடத்தினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மேக்குடி பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ், துணைத்தலைவர் சேகர் மற்றும் ஊரக மறுவாழ்வுத்திட்ட பணியாளர் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருச்சி நோய் புலனாய்வுத்துறையின் சார்பில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சத்யா, சினை பிடிக்காத மாடுகளுக்கான ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றார். பாகனூர் கால்நடை மருந்தகத்தின் சார்பில் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் இன்பசெல்வி, டாக்டர் சுப்பிரமணியன், கால்நடை ஆய்வாளர்கள் செல்வராணி, அன்னலெட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராணி, ஊர்தி ஓட்டுனர் செல்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News