உள்ளூர் செய்திகள் (District)

24 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்

Published On 2022-09-21 09:14 GMT   |   Update On 2022-09-21 09:14 GMT
  • 24 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது
  • திருச்சி மாவட்டத்தில் இன்று நடந்தது

திருச்சி:

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று திருச்சி மாவட்டத்தில் புறநகர் பகுதியில் 14 இடங்களிலும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தேவி பள்ளி, ஸ்ரீரங்கம் நடுநிலைப்பள்ளி, அரங்கநாயகி நடுநிலைப்பள்ளி, மேல சித்திரை வீதி ராஜன் பள்ளி, மேலூர் அய்யனார் பள்ளி, கிழக்கு ரங்கா பள்ளி, உறையூர் பாண்டமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், காந்திபுரம் தேவர் காலனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 12 இடங்களில் சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags:    

Similar News