உள்ளூர் செய்திகள்

முசிறியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

Published On 2023-02-08 10:02 GMT   |   Update On 2023-02-08 10:26 GMT
  • முசிறியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
  • செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு மழைக்காலங்களில் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்கினார்

முசிறி:

முசிறியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எம்.ஐ.டி. வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் வேளாண்மை உதவி இயக்குநர் நளினி மற்றும் வேளாண்மை அலுவலர் பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர் ராஜசேகர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தார். இதேபோல் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு மழைக்காலங்களில் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்கினார். இதில் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் அபிநயா, அபிதாஸ்ரீ, ஆசியா, ஆர்த்தி அழகேஸ்வரி, அபிநயா, அனிஷா கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News