உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே ெரயில்வே கிராசிங் கேட்டை உடைத்துக் கொண்டு பாய்ந்த லோடு ஆட்டோவால் பரபரப்பு

Published On 2023-02-13 09:46 GMT   |   Update On 2023-02-13 09:46 GMT
  • திருச்சி அருகே ெரயில்வே கிராசிங் கேட்டை உடைத்துக் கொண்டு பாய்ந்த லோடு ஆட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது
  • உடனடியாக ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த வழியாக வரும் ெரயில்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டன

திருச்சி:

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே எலமனூரில் ெரயில் நிலையம் உள்ளது. இங்கு கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எலமனுார் கிராமத்துக்கு செல்ல லெவல் கிராசிங் உள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் ெரயில் வருவதற்கு சற்று முன் லெவல் கிராசிங்கில் உள்ள கேட்டை பணியில் இருந்த ெரயில்வே ஊழியர் மூடியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ ஒன்று மூடிய கேட்டில் மோதியது. இதில் அந்த ஆட்டோ கேட்டை உடைத்து கொண்டு தண்டவாள பகுதிக்கு பாய்ந்தது. இதைக் கண்டு ெரயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சிஅடைந்தனர்.உடனடியாக ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த வழியாக வரும் ெரயில்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டன. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் ெரயில் வராதததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பின்னர் தண்டவாள பகுதியில் இருந்து விபத்துக்குள்ளான ஆட்டோ அப்புறப்படுத்தப்பட்டு ெரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ெரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டதில் லோடு ஆட்டோ தகுதி சான்று இல்லாமல் இருப்பதும், ஆட்டோ ஓட்டிய நபருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




Tags:    

Similar News