திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் நாளை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 பாராட்டு விழா - அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு
- திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது.
- அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் உள்ளிட்ட மாணவ மாணவியரை பாராட்டி பரிசு வழங்கி பேசுகிறார்
திருச்சி,
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு மத்திய மாநில அரசு பதவிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்.தேர்வுகளில் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில்சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்விலும் என்.ஆர்.ஐ.ஏ. எஸ். அகாடமி மாணவர்கள் சாதித்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
என்.ஆர்.ஐ. ஏ.எஸ்அ காடமி தலைவர் ஆர். விஜயாலயன் வரவேற்று பேசுகிறார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் உள்ளிட்ட மாணவ மாணவியரை பாராட்டி பரிசு வழங்கி பேசுகிறார்.
மேலும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவில் கல்வியாளர்கள்,என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் என்.ஆர். பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முடிவில் மாணவர் எம்.மணிவண்ணன் நன்றி கூறுகிறார்.