உள்ளூர் செய்திகள்

உடன்குடி பகுதியில் கிணற்று நீர்பாசனத்தை மேம்படுத்த முழுமானியத்துடன் உதவி தொகை விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-08-05 09:22 GMT   |   Update On 2022-08-05 09:22 GMT
  • 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்துக்குமேற்பட்ட கிணற்றுநீர் பாசனத்தின்மூலம் உடன்குடிவெற்றிலை, வாழை, நெல், பல வகையானகாய்கனி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
  • ஆண்டுதோறும்பருவமழை தவறியதாலும், குளங்கள், குட்டைகளில் வருடம்தோறும் தண்ணீர் தேக்கி வைக்காததாலும், கிணற்று நீர் பாசனம் அடியோடு அழிந்தது

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில்உள்ள பல்வேறு விவசாயிகள், பொதுநல அமைப்பினர் ஆகியோர் முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

உடன்குடிவட்டார பகுதியில்உள்ளசுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்துக்குமேற்பட்ட கிணற்றுநீர் பாசனத்தின்மூலம் உடன்குடிவெற்றிலை, வாழை, நெல், பல வகையானகாய்கனி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது.

ஆண்டுதோறும்பருவமழை தவறியதாலும், குளங்கள், குட்டைகளில் வருடம்தோறும் தண்ணீர் தேக்கி வைக்காததாலும், கிணற்று நீர் பாசனம் அடியோடு அழிந்தது, கடந்த ஒரு சில ஆண்டுகளாக மீண்டும் குளங்கள் குட்டைகள் நிரம்பி, ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற அமைப்பின் மூலம் உருவான அனைத்துகுளங்கள் முழுமையாக நிரப்பபட்து.இதனால் விவசாய நிலங்கள் நல்ல நிலமாக மாறியது.கிணற்றுநீரும் சுவையான நீராக மாறியது.0 மீண்டும் கிணற்று நீர் பாசனத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News