உள்ளூர் செய்திகள்

கடலூர் துணை மேயர் தாமரைச் செல்வன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள்.

வி. குமாரமங்கலம் ஏரியில் சட்ட விரோதமாக மணல் எடுத்துவர்கள் மீது நடவடிக்கை: கலெக்டரிடம் துணை மேயர் தாமரைச்செல்வன் மனு

Published On 2023-05-09 07:00 GMT   |   Update On 2023-05-09 07:00 GMT
  • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தார்.
  • சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏரியில் மீன் வளர்த்து விற்பனை செய்யும் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் செல்வகுமார் ஜோதி பாசு, வைரமுத்து, சரவணன், ராஜீ மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது

கம்மாபுரம் அருகே வி. குமாரமங்கலம் கிராமத்தில் இன்பராஜ், தினேஷ்குமார் ஆகிய 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்து விட்டனர். அந்த கிராம ஏரியில் சட்டவிரோதமாக மணல் எடுத்ததால் பள்ளத்தில் மூழ்கி சிறுவ ர்கள் இறந்துவிட்டார்கள்.. சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏரியில் சட்டவிரோதமாக மீன் வளர்த்து விற்பனை செய்யும் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News