உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை.

1000 வழங்கும் திட்டத்தில் சந்தேகம் தீர்க்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

Published On 2023-07-20 09:18 GMT   |   Update On 2023-07-20 09:18 GMT
  • பொதுமக்கள் நேரிலோ அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்
  • அதிகாரிகள் தகவல்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ரேசன் கடை பணியாளர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று விநியோகம் செய்கின்றனர்.

இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உரிமை தொகை பெறுவது சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

பொதுமக்கள் நேரிலோ அல்லது போன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உரிமை தொகை விண்ணப்பங்கள், டோக்கன்கள் கிடைக்கவில்லை என்றாலும் அல்லது இந்த திட்டம் குறித்த சந்தேகங்கள் குறித்தும் பொதுமக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதில் அதிகாரிகள் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்படும்.

கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416-2258016 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News