உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் பெட்டிக்கடையில் ேசாதனை செய்த காட்சி.

குட்கா விற்ற 19 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2023-09-16 08:34 GMT   |   Update On 2023-09-16 08:34 GMT
  • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது
  • தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அரசு பள்ளி அருகே மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்ப டுவதாக புகையிலை தடுப்பு அலுவலர் ஜெயஸ்ரீக்கு ரகசிய புகார் வந்தது.

அதன்படி பள்ளி கொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெட்டுவாணம் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது பெட்டிக்கடை களில் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையா ளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இது குறித்து புகையிலை தடுப்பு அலுவலர் கூறியதாவது:-

பள்ளிக்கூடம் அருகில் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது.

மேலும் கடைகள் முன்பு புகையிலை, சிகரெட் படங்கள் விளம்பரங்கள் பற்றிய துண்டுபிரசுரங்கள் ஒட்டி இருந்தால், அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

வெட்டுவாணத்தில் நடைபெற்ற சோதனையில் 19 கடைகளின் உரிமையா ளர்களுக்கு ரூ.2,900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News