உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2023-05-09 08:07 GMT   |   Update On 2023-05-09 08:07 GMT
  • குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த வராக இருத்தல் வேண்டும்
  • வருகிற 31-ந்தேதி கடைசி நாள்

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

முதல்-அமைச்சர் மாநில 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படவுள்ளது.

விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதிகள்:-

15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் (1.04.2022) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் (31.03.2023) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

கடந்த நிதியாண்டில் அதாவது 1.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த வராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).

விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்ப டக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந்தேதி மாலை 4 மணிக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை 74017 03483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவர் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News