உள்ளூர் செய்திகள்

பீடி தொழிலாளர்கள் பிரசார இயக்கம்

Published On 2022-12-19 10:03 GMT   |   Update On 2022-12-19 10:03 GMT
  • போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளன மாநாடு கேரள மாநிலம் கன்னூரில் வருகிற 28, 29-ந் தேதி நடக்கிறது.

இநனையொட்டி வேலூர் திருப்பத்தூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் சத்துவாச்சாரியில் பிரசார பேரணி நடந்தது.

தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பொது செயலாளர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பீடி தொழிலை நலிவடைய செய்யும் கொள்கைகளை கைவிட வேண்டும். பீடி மீது விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.

ஓய்வு பெறும் பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும். போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.

Tags:    

Similar News