உள்ளூர் செய்திகள்

ஜலகண்டேஸ்வரர் கோவில் கிணற்றில் பக்தர்கள் வீசிய நாணயங்கள் சேகரிப்பு

Published On 2023-11-05 08:44 GMT   |   Update On 2023-11-05 08:44 GMT
  • 1981-ல் தண்ணீருக்காக 25 அடி ஆழ கிணறு தோண்டப்பட்டது
  • 10 அடி ஆழத்தில் நைலான் வலையை அமைத்து கட்டி வைத்தனர்

வேலூர்:

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இக்கோவிலில் தண்ணீர் இல்லாததால், கோவிலின் உள்ளே 1981-ல் தண்ணீருக்காக 25 அடி ஆழ கிணறு தோண்டப்பட்டது.

மழைக் காலங்களில் இந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் அங்குள்ள கிணற்றில் சில்லரை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை அதில் போட்டு வந்தனர்.

பல ஆண்டுகளாக பக்தர்களால் கிணற்றில் போடப்பட்ட நாணயங்கள் நாளடைவில் குவிந்தன. கிணற்றில் இருந்து நாணய ங்களை எடுப்பதற்காக அதிகாரிகள் பலமுறை முயன்றனர். கிணற்றில் சேரும் சகதியுமாக இருந்ததால் நாணயங்களை எடுக்க முடியாமல் போனது. மேலும் கிணற்றில் போடப்படும் நாணயங்கள் கிணற்றின் உள்ளே விழாமல் இருப்பதற்காக 10 அடி ஆழத்தில் நைலான் வலையை அமைத்து கட்டி வைத்தனர்.

இந்த நிலையில் கிணற்றில் இருந்து நாணயங்களை எடுக்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர்.

பின்னர் கிணற்றில் இறங்கி நாணயங்களை சேகரித்தனர். நாணயங்கள் கிணற்றில் சுவற்றிலும், சேற்றிலும் சிக்கி இருந்தது.

அதனை ஊழியர்கள் எடுத்தனர். அந்த சில்லறை காசுகளை எண்ணிய போது ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News