- மின்கம்பி அறுந்து கொட்டகை மீது விழுந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புகல் கிராமம், செட்டியார் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40), விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார்.
பசு மாட்டை கட்டுவதற்காக இரும்பு தகர சீட்டை கொண்டு கொட்ட கை அமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அப்போது வெங்கடேசன் பாட்டை கொட்டகைக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கொட்டகையின் மேல் சென்ற மின்சார கம்பி அறுந்து மாட்டு கொட்டகையின் மீது விழுந்தது. இன்று காலை வழக்கம் போல் வெங்கடேசன் பால் கறக்க கொட்டகைக்கு சென்றார். அப்போது பசு மாடு இறந்த கிடந்தது. அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் கொட்ட கையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பியை பிடித்தார்.
அப்போது வெங்க டேசனையும் மின்சாரம் தாக்கியது.
இது தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சை க்காக அணை க்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.