வேலூர் மாவட்டத்தில் போலீஸ் வாகனங்களை எஸ்.பி. ஆய்வு
- 8 டிரைவர்களுக்கு மெமோ
- போலீஸ் ரோந்து பணிக்காக 127 வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ரோந்து பணிக்காக 42 நான்கு சக்கர வாகனங்களும், 44 பைக்குகள் என மொத்தம் 127 வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாதம் தோறும் போலீஸ் சூப்பிரண்டு வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி வேலூர் நேதாஜி மைதானத்திற்கு இன்று 86 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்படன வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் போலீசாரின் வாகனங்களை ஆய்வு செய்தார்.
அப்போது வாகனங்களில் சரியான அளவு என்ஜின் ஆயில் மற்றும் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்ப டுகிறதா என ஆய்வு செய்தார். ஆய்வின்போது வாகனங்களை சரிவர பராமரிக்காத 8டிரைவர்க ளுக்கு மெமோ வழங்கினார். அதேபோல் வாகனங்களை முறையாக பராமரித்து இருந்த 4 டிரைவர்களுக்கு ரிவார்டு வழங்கினார்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 127 வாகனங்களில் இன்று 86 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 வாகனங்கள் மற்றொரு நாள் ஆய்வு செய்யப்படும்.
ஒழுங்காக வாகனங்களை பராமரிக்காத டிரைவர்க ளுக்கு பழைய வாகனங்கள் வழங்கப்படும். முறையாக பராமரிப்பு செய்த டிரைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், டி.எஸ்.பி.க்கள் மனோகரன், திருநாவுக்கரசு, ராமமூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.