உள்ளூர் செய்திகள்
வேலூர் மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டன
- 1167 வாக்குப்பதிவு எந்திரங்கள் 635 கட்டுப்பாட்டு கருவிகள்
- 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.
15 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என விதி உள்ளதால் மாநகராட்சி வளாகத்தில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டு எந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டன.
1167 வாக்குப்பதிவு எந்திரங்கள் 635 கட்டுப்பாட்டு கருவிகள் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.