மேட்டூரில் துணிகரம் கூரியர் நிறுவன ஷட்டரை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
- இரவு கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
- மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது.
மின்சார வயர் துண்டிப்பு
நேற்று இரவு இந்த கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
இந்த நிறுவனத்தில் பணம் வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகத்தை யாராவது தொட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையிலான வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அந்த மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்களை எடுத்துச் சென்று, மேட்டூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் அதனை போட்டு சேதப்படுத்தினர்.
கூரியர் நிறுவனத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்னதாக, அந்த பகுதியில் இருந்த தெரு விளக்குகள், கட்டிடத்தின் முன்பு இருந்த டியூப் லைட்டுகளை சேதப்ப டுத்தி, அந்த பகுதியை இருட்டாக்கிவிட்டு உள்ளே நுழைந்து பணத்தை திருடி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
அதிர்ச்சி
வழக்கம்போல் இன்று காலை கூரியர் நிறு வனத்திற்கு வேலைக்கு வந்த ஊழியர்கள், ஷட்டர் உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிய டைந்த னர். பின்னர் இது தொடர்பாக மேட்டூர் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் தான், கொரியர் நிறுவ னத்தில் இருந்து திருட்டுப் போன பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.