உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஆத்தூர் வட்டார பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பு

Published On 2022-08-16 04:58 GMT   |   Update On 2022-08-16 04:58 GMT
  • ஆத்தூர் வட்டார பகுதிகளில் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
  • குடிதண்ணீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செம்பட்டி:

செம்பட்டி அருகே, பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் காளீஸ்வரி, ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்துள்ள 16 தீர்மானங்கள் மற்றும் குடிதண்ணீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆத்தூர் வட்டாரம், பாளையங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வம் லட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சித்தரேவு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி மலர்கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் கலந்துகொண்டார். ஊராட்சி செயலர் சிவராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடிதண்ணீர், தெருவிளக்கு, சுகாதாரம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

போடிகாமன்வாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் நாகலட்சுமி சசிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடி தண்ணீர், சுகாதாரம் உட்பட முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீவல்சரகு ஊராட்சியில் நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்திற்கு தலைவர் ராணி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆணையாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், துணைத் தலைவர் தனபாக்கியம், ஊராட்சி செயலர் சேசு மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் ஜம்ரூதீன் பேகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சையது அபுதாஹிர், ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அக்கரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் லட்சுமி சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் மலைச்சாமி, ஊராட்சி செயலர் (பொறுப்பு) நடராஜ், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.பாறைப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் சுருளியம்மாள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நடராஜன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீரக்கல் ஊராட்சியில் நடைபெற்ற, கிராமசபை கூட்டத்தில் தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத் தலைவர் யூசின் ராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துசாமி, வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வக்கம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் ஜான் கென்னடி, ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பித்தளைப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் மயில்சாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், துணைத்தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி செயலர் கண்ணையன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், துணைத் தலைவர் கவிதா, ஊராட்சி செயலர் அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்துள்ள 16 தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News